search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயிறு புற்றுநோய்"

    வயிறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபரின் ஒட்டுமொத்த வயிற்றையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு முன்னர் அவர் கடைசியாக பிரியாணி சாப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. #stomachcancer
    துபாய்:

    துபாயைச் சேர்ந்த குலாம் அப்பாஸ் என்ற இளைஞருக்கு வயிற்றில் நீண்ட நாட்களாக வலி இருந்தது. அதோடு அவர் உடல் எடையும் வெகுவேகமாக குறைந்தது. இதனால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதற்காக நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

    இருந்தாலும், நிலைமை மிகவும் மோசமாகி அப்பாஸ் வயிற்றில் பெரிய கட்டி உருவானது. அது அவர் வயிற்றையே அடைத்துவிட்டது. இதனால், வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதே சிறந்தது என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். அதற்கு குலாம் அப்பாஸ் ஒப்புக்கொண்டார். ஆனால், வயிறு அகற்றப்படுவதற்கு முன், தனக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியை கடைசியாக சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்களிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து, குலாம் அப்பாஸ் மனைவி சமைத்துக் கொண்டுவந்த பிரியாணியைக் கடைசியாக அவர் வயிறு முட்ட ருசித்துச் சாப்பிட்டார். விரைவில் அவருக்கு அருவை சிகிச்சை செய்து வயிறு அகற்றப்பட உள்ளது.

    இதுதொடர்பாக அப்பாஸ் கூறுகையில், என் இரண்டு குழந்தைகளும் நான் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்கள் வளர்ந்து நல்ல நிலைமைக்கு வருவதை நான் பார்க்க வேண்டும். அதுவரை உயிருடன் இருக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்னர், வயிற்றில் இரைப்பை அல்லது வேறு ஏதேனும் உறுப்பு நீக்க அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த வயிற்றையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது எங்கள் மருத்துவமனையில் இதுதான் முதன்முறை என லேப்ரோஸ்கோபி நிபுணர் அலி கம்மாஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவரது வயிறு அகற்றப்பட்ட பிறகு அவர் வாழ்க்கை கடினமாக மாறலாம், திரவ உணவுத்தவிற வேறு எதையும் சாப்பிட முடியத நிலை ஏற்படும் என அவர் கூறினார். #stomachcancer
    ×